மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்ததைப் பாராட்டி பதிவிட்டுள்ளார், முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2024 - 25 ஆம் ஆண்டின் மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில் அவர் கூறியதாவது, 9.69 சதவிகித வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே தமிழகம் மிக அதிக விகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாலினச் சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை எட்டியுள்ளதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திமுக அரசு வடிவமைத்து வருகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
2023 - 24 நிதியாண்டில் ரூ. 15,71,368 கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 -25ல் ரூ. 17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், இதே வளர்ச்சி தொடர்ந்தால், 2033 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிக்க: அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.