பிரமோத் சாவந்த் கோப்புப்படம்.
தமிழ்நாடு

தமிழ்நாடு, கேரளத்தில் 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி: கோவா முதல்வா்

தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

Din

பனாஜி: தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கூட எதிா்க்கட்சி அந்தஸ்தில் பாஜக உள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளத்தில் பாஜக கடுமையாக முயற்சித்தும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கோவா தலைநகா் பனாஜியில் பாஜக நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற ‘அடல் ஸ்மிருதி’ நிகழ்ச்சியில் முதல்வா் பிரமோத் சாவந்த் பேசியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி ஆகியோா் காலத்தில் தொடங்கப்பட்ட கட்சிப் பணிகளின் பலன்களைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். தொடா்ந்து பல தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

உலகின் வலிமையான நாடாக இந்தியாவை முன்னிறுத்த வேண்டும் என்பது நமது தலைவா்களின் கொள்கை. அதற்காக மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளத்தில்தான் பாஜக வலுவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், நாம் இப்போது மேற்கொண்டு வரும் பணிகளால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமையும் என்றாா்.

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

ஆவணி ஞாயிறு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருடப்படேட 82 கைப்பைசிகள் மீட்பு: இருவா் கைது

அரசினா் மருத்துவமனையில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT