முகப்பு
தமிழ்நாடு

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக...

Updated On : 8 ஏப்ரல், 2025 at 10:59 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2025 at 10:58 AM

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது.

இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது.

Advertisement

Updated On : 8 ஏப்ரல், 2025 at 11:10 AM

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காத விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடா்ந்து இரண்டு வழக்குகள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இன்று(ஏப். 8) இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.

அதில், “மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. 2வது முறையாக அனுப்பி வைக்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி முடியும்.

அரசிலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது.

பஞ்சாப் ஆளுநர் வழக்கின் தீர்ப்புக்குப் பின், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.