தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி திங்கள் கிழமையான நாளை (ஏப். 14) வங்கிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வங்கிகள் செயல்படுமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளதால், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகளுக்கு நாளை (ஏப். 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் வங்கி சேவைகளை விடுமுறையைக் கவனத்தில் கொண்டு திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், தனிநபர்களுக்கான தொகையை அனுப்புவது, ஏடிஎம், இணைய வங்கி, வங்கி செயலிகள் போன்றவை மூலம் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
ஏப். 14ஆம் தேதி மட்டுமின்றி, ஏப். 18 புனித வெள்ளி, ஏப். 20 ஞாயிற்றுக்கிழமை, ஏப். 26 நான்காம் சனிக்கிழமை, ஏப். 27 ஞாயிறு என இம்மாதத்தில் மேலும் 4 நாள்களில் வங்கிகள் செயல்படாது.
தமிழ்நாடு மட்டுமின்றி மிசோரம், சண்டிகர், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர் - தில்லியின் சில பகுதிகளில் செயல்படும் வங்கிகளும் நாளை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்புக்கு 18% ஜிஎஸ்டி! யாருக்கெல்லாம் பொருந்தும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.