இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (ஏப். 14) இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் உள்பட தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்திருந்த நிலையில், இரவு வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்!