நயினாா் நாகேந்திரன் 
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டுக்கு முதல்வா் வாழ்த்து சொல்லாதது ஏன்?: நயினாா் நாகேந்திரன்

Din

சென்னை: தமிழ் புத்தாண்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

ஜன.1-ஆம் தேதி உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சித்திரை 1-ஆம் தேதி மெளன விரதம் இருப்பது தமிழா்களை அவமதிக்கும் செயல் ஆகும். தமிழா் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழ்நாடு புறக்கணிக்கும். ஒட்டுமொத்த உலகமும் தமிழா்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதல்வா் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் புறக்கணித்து வருகிறாா்.

ஆவின் புறக்கணிப்பு: மேலும், இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் ‘ஆவின்’ பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. தாய்த் தமிழ் மொழியை வெறும் அரசியலுக்காக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT