அமைச்சர் துரைமுருகன்  
தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

DIN

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 761 பயணாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்டும் ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர் அவரிடம் நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும் என கூறி தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த திமுகவால் 22 மாணவர்கள் உயிரிழந்ததாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்களுக்கு தைரியம் இருந்தால் இது குறித்து சட்டப்பேரவையில் பேச சொல்லுங்கள் என பதிலளித்தார்.

மேலும், 2026 இல் இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது குறித்து கேள்விக்கு, "ஐயோ பாவம்" என சிரித்தபடி பதிலளித்து சென்றார் அமைச்சர் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

ஆசிய கோப்பை: ஒரு வாரத்துக்கு முன்பாகவே துபை செல்லும் இந்திய அணி!

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

SCROLL FOR NEXT