ஈஸ்டர் திருநாள் திருப்பலியில் நேற்று பங்கேற்ற போப் பிரான்சிஸ் AP
தமிழ்நாடு

கருணை, முற்போக்கு சிந்தனையுடன் திகழ்ந்தவர்! போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக’ குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையை அக்கறையுடனும் நன்மதிப்புடன் கூடிய முற்போக்கு பாதையில் வழிநடத்தியவர் போப் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிறர் துன்பத்தை தம் துன்பம் போல் எண்ணி இரக்க குணத்துடன் செயல்பட்டவர் என்றும், முற்போக்கு குரலாக ஒலித்தவர் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு, ஒடுக்கப்பட்டோருக்கு அவர் அளித்த ஆதரவுக்கரம், ‘நீதி, அமைதி, மதங்களுக்கு’ இடையிலான நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தை ஆகியவை கத்தோலிக்க திருச்சபையை கடந்தும் உலகெங்கிலும் அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது.

செயலில் கருணை மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்க பெருவழியை நம்மிடையே அவர் விட்டுச் சென்றுள்ளார் என்று பொருள்பட தமது இரங்கல் செய்தியில் போப் பிரான்சிஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர்.

நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார். இந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சிக்காக திரண்டிருந்த மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ். இந்தநிலையில், போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT