சட்டப் பேரவை வளாகத்தில் இபிஎஸ் பேட்டி. 
தமிழ்நாடு

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

மின் கட்டண உயர்வு தொடர்பாக இபிஎஸ்.

DIN

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

இதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி மறுத்ததைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சட்டப் பேரவை வளாகத்தில் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது

இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு கேட்டோம். மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால்தான் உரிய பதில் கிடைக்கும் என்று, இன்று பேரவையில் பேச முயன்றோம், ஆனால் இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்கு பேரவைத் தலைவர் முழுமையாக அனுமதியை வழங்க மறுத்து விட்டார்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக்காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால், சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்க சிரமமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர், இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்க சென்று விட்டனர்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்து, நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT