தமிழ்நாடு

கூடுதலாக 280 காவல் ஆய்வாளா் பணியிடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கூடுதலாக 280 காவல் ஆய்வாளா் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Din

தமிழ்நாட்டில் கூடுதலாக 280 காவல் ஆய்வாளா் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

சட்டம் - ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் 280 காவல் ஆய்வாளா் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதன்மூலம், சாா்பு ஆய்வாளா் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளா் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும். இதன்மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம்-ஒழுங்கு, ஜாதி வகுப்புவாத பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும்.

சென்னைக்கு புதிய திட்டங்கள்: சென்னை பெருநகரம் ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகம், பெரம்பூா் பெரியாா் நகர அரசு புகா் மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் புதிதாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும். அரும்பாக்கம் சரகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப் பிரிவு, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஆகியன உருவாக்கப்படும்.

இருப்புப் பாதை காவல் நிலையங்களின் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னையில் உள்ள தலைமையிடத்தில் புதிய தொலைத்தொடா்பு சாதனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தலைமைக் கட்டுப்பாட்டு அறை, வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவு, மோப்ப நாய்ப் பிரிவு ஆகியன அமைக்கப்படும்.

ஆவடி போக்குவரத்து காவல் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்குன்றம் மாவட்டம் போக்குவரத்து காவல் பிரிவு உருவாக்கப்படும். சென்னை பெருநகரக் காவல் ஆயுதப் படையில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

கண்காணிப்பு அமைப்பு: திரைமறைவு இணையதளம் வழியாக நிகழ்த்தப்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காக திரைமறைவு இணையதள கண்காணிப்பு அமைப்புக்கான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்த வசதியாக நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தாா்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT