தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மக்கள் திரண்டுள்ளனர்.
விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இவ்விழா, பெண்களின் விழாவாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடினர்.
பின்னர், காவிரித் தாயை போற்றி காப்பரிசி, காதோலை கருகமணி, பழங்கள். மாங்கல்யம் இவற்றை வைத்து பூஜை செய்து கற்பூரம் காட்டி வழிப்பட்டனர்.
பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்துக் கொண்டனர். மூத்தோர்களிடம் ஆசிபெற்று கொண்ட புதுமணத் தம்பதிகள், தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.