பிரேமலதா விஜயகாந்த் dotcom
தமிழ்நாடு

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார் பிரேமலதா

இணையதளச் செய்திப் பிரிவு

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் கேப்டனின் ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்திரையை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பத்தூரில் தொடங்கினார். அன்றைய தினம் வேனில் சென்றபடி மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் கெங்கவல்லி, மேட்டூர் சதுரங்காடி, தருமபுரியில் பல்வேறு இடங்களிலும் பிரேமலதா கடந்த ஒரு சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாமல், தேமுதிக சந்திக்கும் முதல் பேரவைத் தேர்தல் என்பதால், கட்சியைப் பலப்படுத்தவும், கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இந்த பிரசாரம் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதன்கிழமை இரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்டிய மேம்பாலத்துக்கு அருகே வந்ததும், வாகனத்தில் இருந்து இறங்கி, விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து, மேம்பாலத்தில் விழுந்து வணங்கினார். இதனைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT