கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சூழல் சுற்றுலாத் தளம் இன்று(ஆக. 17) ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்றுமுதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத் தளம் வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்தில் கொண்டு வனத் துறைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு சீரான பின்னர், சுற்றுலாப் பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிக்க: ஹிந்தியில் ரீமேக்காகும் பெருசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.