மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 19) தனது 100 வது தொகுதியான ஆற்காட்டுக்குச் சென்றடைந்துள்ளார்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப் பயணம், 34 நாள்களில் 10,000 கிலோமீட்டர் கடந்து, தினமும் சுமார் 14 மணி நேரம் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்னைகளை நேரடியாகக் கேட்டும் தீர்வு கூறியும் உள்ளார்.
பொங்கலுக்கு மீண்டும் ரூ. 2,500 பணம், இலவச வேட்டி சேலை, தீபாவளிக்கு சேலை, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்தார்.
இந்த நிலையில், ஆற்காடு பிரசார கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ’’ஒவ்வொரு ஊரிலும், வேலைவாய்ப்பு இழப்பு, விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் ஆகியவற்றால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
மீண்டும் அதிமுக நேர்மையான ஆட்சியையும் வளர்ச்சியையும் கொடுக்கும் என்று அவர்களின் கண்களில் நம்பிக்கை தெரிகிறது” என்று தெரிவித்தார்.
ஆற்காட்டில் 100வது தொகுதி பயணத்தை நிறைவு செய்த இபிஎஸ், “இந்த எழுச்சிப் பயணம் துவக்கம் மட்டுமே. உண்மையும், உழைப்பும், அம்மாவின் பார்வையும், வழிகாட்டும் தமிழ்நாட்டை நாம் சேர்ந்து உருவாக்குவோம்,” என்று உறுதியாக அறிவித்தார்.
இதையும் படிக்க: மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.