கோப்புப் படம் படம் | எக்ஸ்
தமிழ்நாடு

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

தவெக மாநில மாநாட்டில் ஒலித்த விஜய்யின் திரைப்பட பாடல்கள் குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் விஜய்யின் பிரபல திரைப்பட பாடல்கள் ஒலிப்பரப்பு செய்யப்பட்டன.

மதுரையில் நடிகர் விஜய்யின் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெறுகிறது. மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே, லட்சக்கணக்கான தவெக தொடண்டர்கள் மாநாட்டின் திடலில் குவிந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், மாநாடு தற்போது தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அங்கு வரவுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வருகைக்காக அவரது தொண்டர்கள் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாநாட்டில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, தவெக கொடி பாடலுடன், நடிகர் விஜய்யின் பிரபல திரைப்பட பாடல்களும் ஒலிப்பரப்பட்டன.

இந்நிலையில், விஜய்யின் பிகில் திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, திருப்பாச்சி படத்தின் நீ எந்த ஊரு, அழகிய தமிழ்மகன் படத்தின் எல்லாப் புகழும் ஒருவனுக்கே மற்றும் மெர்சல் திரைப்படத்தின் ஆளப்போறான் தமிழன் ஆகிய பாடல்கள் ஒலிப்பரப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

முன்னதாக, இந்த மாநாட்டில் தவெக-வின் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

SCROLL FOR NEXT