பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீரென்று முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இரண்டு முறை வாந்தியும் எடுத்தாா். ஏற்கெனவே, இதய பிரச்னைக்கு சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், உடனடியாக அவா் காரில் அழைத்து வரப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா். ஓரிரு நாளில் ஜி.கே.மணி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.