திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர்கள் குவிப்பு 
தமிழ்நாடு

ஆம்பூர் கலவர வழக்கு: ஆக. 28 -க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆம்பூர் கலவர வழக்கில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் 2 எஸ்பிக்கள் தலைமையில் 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்ற இளைஞரை, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஷமீல் அகமது அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் காவலில் இருந்தபோது காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதில், ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை சேதப்படுத்தியதாக 191 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக வெளியான தகவலை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 1,200 -க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Verdict in Ambur riot case postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT