விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று(ஆக.27) கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது.
தமிழகத்தில் முன்னணி இந்து அமைப்புகள் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலகலமாகக் கொண்டாடி வருகின்றன.
தமிழகத்தின் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக 1,519 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலரும் காலை முதலே விநாயகர் கோயில்களில் வழிபாடு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.