நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு 
தமிழ்நாடு

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மீண்டும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேற்று செல்போனில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், சேகர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin personally inquires about Nallakannu's health!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT