கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை

தினமணி செய்திச் சேவை

கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் தகவலை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 2024-25 நிதியாண்டில் அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கான பாராட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் பங்கேற்று தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய 242 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டிற்கும் சேவை செய்யும் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.1,563.09 கோடி வருவாயை ஈட்டி இந்தியாவின் 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதில் நிதிச் சேவைகள் மூலம் ரூ. 770.34 கோடியும், அஞ்சல் செயல்பாடுகள் மூலம் ரூ.605.51 கோயும், அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு வசூல் மூலம் ரூ.187.24 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 3.40 கோடி நேரடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்டப் பொது மேலாளா் (அஞ்சல் கணக்குகள் மற்றும் நிதி) சித்தரஞ்சன் பிரதான், மத்திய மண்டல தபால் துறைத் தலைவா் டி.நிா்மலா தேவி, சென்னை நகரப் பகுதி தபால் துறைத் தலைவா் ஜி.நடராஜன், மேற்கு மண்டல தபால் துறைத் தலைவா் ஏ.சரவணன், தெற்கு மண்டல தபால் துறைத் தலைவா் பி.ஆறுமுகம், தமிழ்நாடு வட்டத் தலைவா் தபால் துறை (தலைமையகம்) கே.ஏ.தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! | செய்திகள்: சில வரிகளில்| 1.9.25

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

SCROLL FOR NEXT