வெடிகுண்டு மிரட்டல்  கோப்புப்படம்
தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்பநாயுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. மாவட்ட ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதைத்தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீஸார் மோப்ப நாயுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களிலும், அனைத்து அறைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியா்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதியும், நவம்பர் 19 ஆம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bomb threat to Tiruppur District Collectorate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!

எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு!

சென்னையை நோக்கி வரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு கவனம்

வண்ண நிலவே... அனுபமா!

பட்டமாக பறக்கிறேன்... சுஷ்ரி மிஸ்ரா

SCROLL FOR NEXT