மழை (கோப்புப்படம்) Din
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

மாலை 4 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Meteorological Department has announced that the rain will continue until 4 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

107 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிளே ஆப்ஸுக்கு முன்னேறுமா சிட்னி சிக்ஸர்?

8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்! அதிபருடன் சந்திப்பு!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஆளும் பாஜக தொடர் முன்னிலை!

சிரஞ்சீவி படத்தினால் பாதிப்பு? பிரபாஸ் பட வசூல் எவ்வளவு?

புதுமையான படிப்புகள் வழங்கும் இந்திய அறிவியல் கழகம்!

SCROLL FOR NEXT