கோப்புப் படம் 
தமிழ்நாடு

திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை

தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவித்து ஆட்சியர் எம். பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.

இதனால் வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச., 3) விடுமுறை அறிவித்து ஆட்சியர் எம். பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க | தொடரும் மழை! வட சென்னை பகுதி மக்கள் பரிதவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம்: மேயர் பிரியா விளக்கம்

தேமுதிக எங்கள் குழந்தை; அம்மாவாக எனக்கு கடமை அதிகம்: பிரேமலதா

இன்று 4, நாளை 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!

ஸ்டீவ் ஸ்மித் 2.0..! டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாதது ஏன்?

SCROLL FOR NEXT