தொடர் மழையால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச., 4) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று (டிச., 3) முழுவதுமே பரவலாக மழை பெய்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதிகள் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து ,அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.