சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி. 
தமிழ்நாடு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோக்கி ஆய்வு!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோக்கி ஆய்வு செய்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல்மிஸ்ரா, சுமித்சரண் மேற்பார்வையில் குழு அமைத்தது.

குஜராத் மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவினர் கடந்த ஒரு மாதமாக கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய மேற்பார்வை குழுவினர், செவ்வாய்க்கிழமை கரூர் வந்தனர்.

சிபிஐ அதிகாரிகளுடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கூட்ட நெரிசல் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தவெகவினர் பிரசாரத்துக்கு அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

Judge Ajay Rastogi inspects Veluchamipuram in Karur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

கராத்தே பாபு டீசர்!

ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

SCROLL FOR NEXT