தொடர் மழை காரணமாக, நீர்மட்டம் அதிகரித்து வருவதால், விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விம்கோ நகர் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை விம்கோ நகர் மெட்ரோ வாகன நிறுத்துமிடம் பகுதியில் மழையால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
விம்கோ நகர் ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், வாகனத்தை நிறுத்தியவர்கள் உடனே வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வெளிப்படைத் தன்மைக்காகத் தேர்வா? துணிந்து பொய் சொல்கிறார் ஞானேஷ் குமார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.