கோப்புப் படம் 
தமிழ்நாடு

அண்ணாமலை மீண்டும் தில்லி பயணம்!

மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்பு நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் எனத் தெரிகிறது. இத்துடன் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார்.

கூட்டணி இல்லாவிட்டாலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் நட்பை தொடர்வதாகக் கூறிய அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர் சார்ந்த கட்சியின் கருத்துகளைக் கூறுவதாகத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக அரசியல் களத்தை மாற்றும் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் 99.27% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்!

Annamalai travels to Delhi again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசைப் படகு மீனவா்களுக்கு ஆமை விலக்கு சாதனங்கள்

விடுமுறை முடிந்து சொந்த ஊா் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!

மாபெரும் தமிழ்க் கனவு திட்டம்: ஆசிரியா்கள் பயிற்சிக்கு ரூ.1.08 கோடி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் கொமதேக-வுக்கு பல்லடம் தொகுதியை ஒதுக்கக் கோரிக்கை

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

SCROLL FOR NEXT