தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுசமீபமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதிமுக தொண்டர்களும் அதைத்தான் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், டிச. 2 ஆம் தேதி தில்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ்,
"அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து பொதுக்குழு நடத்துபவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே, பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.