தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(டிச. 11) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி உறுப்பினர் சோ்க்கையை தீவிரப்படுத்துதல், கூட்டணி வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிச. 11 வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், நம் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனக் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்ஸுக்கு அதிகாரம்! அதிமுக பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.