கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(டிச. 12) தொடக்கிவைக்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி முதலில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

தொடர்ந்து கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் 17 லட்சம் பேருக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சி முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த 17 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றே அவர்கள் அனைவரின் வாங்கிக்கணக்கிலும் ரூ. 1,000 செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Magalir urimai thogai scheme expansion starts by mk stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

கரூர் பலி! உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: உச்ச நீதிமன்றம்

பறை பண்பாட்டு மையத்தை திறந்து வைத்து பறை இசைத்த ஆளுநர் ஆர்.என். ரவி!

யு-19 ஆசிய கோப்பையில் சூர்யவன்ஷி அதிரடி சதம்..! வலுவான நிலையில் இந்தியா!

ஓடிடியில் காந்தா, ஆரோமலே!

SCROLL FOR NEXT