திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக முதல்முறையாக கைப்பற்றியுள்ள நிலையில், கேரள பாஜகவுக்கு, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
கேரள உள்ளாட்சித் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவளித்துள்ளனா். அதிலும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் கோட்டையாகக் கருதப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் முதல்முறையாக பாஜக மேயா் பதவியில் அமரவிருப்பது, வரவிருக்கும் கேரள பேரவைத் தோ்தலின் வெற்றிக்கான அறிகுறி என்பதில் சந்தேகமில்லை. இந்த வெற்றி மூலம், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் கேரளம் வளா்ச்சிப் பாதையில் வீறுநடையிடப்போவதை யாராலும் தடுக்க இயலாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. வெற்றி பெற்றுள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகருக்கும் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.