அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

பல்லடத்தில் வரும் 29ஆம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பல்லடத்தில் வரும் 29ஆம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக்கழம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - கட்சி துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில்; கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலையில் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., அவர்கள் வரவேற்பில்; வருகிற 29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

இம்மாநாட்டினை அமைச்சர் பெருமக்களான சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

It has been announced that the DMK Western Region Women's Team conference will be held in Palladam on the 29th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT