ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி அளித்து தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் பொதுவெளியில் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ளதால், காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
விஜய்யின் வாகனம் வரும் வழித்தடத்தில் எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக் கூடாது, சாலைவலம் நடத்தக் கூடாது, பிரசாரத்தின்போது விஜய்யுடன் முக்கிய நபர்கள் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்றுவோம் எனக் கூறி, தவெக நிர்வாகிகள் உறுதிமொழி அளித்து பிரமாணப் பத்திரத்தை இன்று ஈரோடு காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அதில், விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கக்கூடிய நிர்வாகிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையின் நிபந்தனைகள் மீறபட்டாலோ, அறிவுரைகளை பின்பற்றவில்லை என்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.