பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் தவெக மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தவெக சார்பில் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தவழும் குழந்தைகள்தான் பெரியவராவார்கள். பெரியவரான பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். இதுதான் வழக்கமான ஒன்று.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.
அடுத்த கூட்டம் பற்றி தலைவரிடம் இன்று பேசிவிட்டு பின்னர் எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.
தேர்தல் வியூகம் பற்றிய கேள்விக்கு, பொங்கல் முடிந்ததற்குப் பிறகு எங்களுடைய திருப்புமுனையைப் பார்த்து நாடே வியக்கும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.