வேலூர் அருகே டிப்பர் லாரி ஒன்று வீட்டுக்கு நுழைந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியிலிருந்து பொன்னைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று மாதாண்ட குப்பம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள பொன்னை அருகே மாதாண்டகுப்பம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி கங்கம்மாள் என்பவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கங்கம்மாள் மீது லாரி மோதியதில் லாரியின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மூதாட்டி கங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அதைக் கண்ட பகுதி பொதுமக்கள் உடனடியாக லாரியை மடக்கிப் பிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னை போலீஸார் கங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி வீட்டுக்குள் நுழைந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.