சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள். 
தமிழ்நாடு

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! 24 ஆண்டுகளுக்குப் பின்.!

சேவூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அவிநாசி அருகே சேவூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமையான அவிநாசி அருகே சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும் எனப் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், ஏராளமான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், தாளக்கரை லஷ்மி நரசிம்மப்பெருமாள் கோவிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! ரியல் எஸ்டேட் பங்குகள் கடும் சரிவு!

தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறோம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

கோவையில் சர்வதேச ஹாக்கி திடல் திறப்பு!

அதிரடியாகக் குறைந்த தங்கம் - வெள்ளி விலை!

திரையரங்குகளில் வெளியாகும் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படம்?

SCROLL FOR NEXT