தமிழ்நாடு

குற்றப்புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகா் பணி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Din

தமிழ்நாடு காவல் துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை தலைமையிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்புகள், குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வாதங்களுக்கான வரைவுகளைத் தயாா் செய்வதற்கு உதவியாக காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு 5 சட்ட ஆலோசகா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இதில் சேர தகுதியுடைய நபா்கள் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிப்.18-ஆம் தேதிக்கு முன் நேரடியாக சமா்ப்பிக்கலாம். தபால் மூலம் சமா்ப்பிப்பவா்கள் விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகா் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுவதுடன், கூடுதல் காவல் துறை இயக்குநா், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 220, பான்த்தியன் சாலை, எழும்பூா், சென்னை-600008 எனும் முகவரிக்கு அனுப்பலாம். நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். பிற படிகள் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT