சுவாமிமலை முருகன் கோயில் 
தமிழ்நாடு

சுவாமி மலையில் காவல்துறை - இந்து அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

சுவாமி மலையில் காவல்துறை - இந்து அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

DIN

கும்பகோணம் அருகே இந்து அமைப்பினர் சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சுவாமிமலைக்கு வேலுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை குறித்து தற்போது சர்ச்சை எழுந்து, இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சுவாமிமலையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் தங்க. கென்னடி தலைமையில் திருப்பரங்குன்றம் மலைக்கு கையில் வேலுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த இந்து அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினரைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து காவல்துறைக்கு இந்து அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT