எடப்பாடி கே. பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி

மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல எடப்பாடி பழனிசாமி கூறினார்.

DIN

மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் `இலக்கு 2026’ லட்சிய மாநாட்டில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது, ``மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இருமொழிக் கொள்கைதான், இதில் மாற்றமில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க கட்டாயப்படுத்துவது சரியல்ல. தேசியக் கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்வது சரியல்ல. தமிழ்நாட்டுக்கு நிதிதர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்’’ என்று தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதன் மூலம், மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கப்படுவதாகக் கூறி, மும்மொழிக் கொள்கைக்கு தவெக தலைவர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

SCROLL FOR NEXT