முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2025 at 9:41 AM
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்குக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுகவிற்கு புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 24.2.2025 - திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு, "பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது" முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →