அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்தும் விஜய். 
தமிழ்நாடு

அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை!

அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்.

DIN

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி சென்னை பனையூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்மாள் நினைவு நான் இன்று (பிப். 20) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.

இதையும் படிக்க: பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள தவெக தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT