புதிய மாவட்ட பொறுப்பாளா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தோ்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளா்களுடன் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழ்நாடுபுதிய மாவட்ட பொறுப்பாளா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தோ்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளா்களுடன் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சென்னை: தோ்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளா்களுடன் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்களை எடப்பாடி பழனிசாமி அண்மையில் நியமித்தாா். இந்த நிலையில் புதிய மாவட்டப் பொறுப்பாளா்களின் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொறுப்பாளா்களுக்கு அறிவுரைத்தாா். அதேபோல, அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணியில் வீரா்களை அதிக அளவில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தோ்தல் பணியில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கூறினாா்.
மாவட்டப் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள தம்பிதுரை, சி.பொன்னையன், பா.வளா்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.