சீமான்.  
தமிழ்நாடு

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

DIN

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வீட்டில் நான் இல்லையென்றால் சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு வரும் சம்மனை அனைவரும் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே. திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில் சம்மனை ஒட்டியுள்ளனர்.

சம்மனை எனக்கு கொடுக்காமல் கதவில் ஒட்டிவிட்டு செல்வது அநாகரிகம். சம்மனை வைத்து சாமி கும்பிடவா முடியும்?. வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைது செய்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான காவலாளி அமல்ராஜையும் காவல் துறை தாக்கியுள்ளது. அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு, சாராயம் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்ததா?.

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மட்டும்தான் என் மீது புகார் வருகிறது. அந்த பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாததால் இபிஎஸ் ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வருமாறு கூறியது காவல்துறைதான்.

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும் என் குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT