மத்திய அரசு விருதுகள்: குகேஷ், துளசிமதிக்கு முதல்வர் வாழ்த்து!
நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா-பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா-பேட்மிண்டன்), அபய் சிங் (ஸ்குவாஷ்) ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகள் அறிவிப்பு! முழுவிவரம்
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!
கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜுனா விருது பெற்றுள்ள துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்! தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.