அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு வெளியே குவிந்திருக்கும் திமுக தொண்டர்கள். 
தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது தொடர்பாக...

DIN

வேலூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீடு, திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த துரைமுருகன் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லை, யார் வந்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை, உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும், விவரம் தெரிந்தவுடன் கருத்து கூறுகிறேன் எனத் தெரிவித்தார்.

அதேபோல் அவருடைய ஆதரவாளாரான காட்பாடி பள்ளிகுப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டிலும் சோதனை ஈடுபட்டு வருகின்றது.

2019 மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் கிடங்கில் 11 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்ததை வருமான வரி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு வெளியே திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT