கோப்புப் படம் 
தமிழ்நாடு

காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல்!

காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணத்தில் ஜிம் உரிமையாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம், கருக்கண் சாவடியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (39). ஜிம் உரிமையாளர். இவரது உடற்பயிற்சி மையம் அருகே இன்று அதிகாலை, காரில் வந்த சில இளைஞர்கள், சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபடுவதை கண்ட பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் நிகழ்வு இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசாரைக் கண்டதும், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

பின்னர், சிலம்பரசன் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர்களான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தருமபுரி அன்பு, மாரண்டஹள்ளி அன்பு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சிலம்பரசனின் உடற்பயிற்சி மையத்தில் சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைத்திருந்த ரூ.22 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி போனஸ் அறிவித்த முதல்வர் Stalin! | செய்திகள்: சில வரிகளில் | 06.10.25

நடன. காசிநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிகார் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர், 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்!

”தவெகவுக்கு பாஜக ஆதரவு தருகிறதா?” - அண்ணாமலை சொன்ன பதில்

உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

SCROLL FOR NEXT