தவெக தலைவா் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

DIN

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் பொங்கல் முடிந்ததும் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

விஜய் வருகைக்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் தேதிகளில் அனுமதி தரும்படி கட்சி தரப்பில் இந்த கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அரசியல் கட்சி அறிவித்த பின்னர் முதல்முறையாக களத்திற்கு விஜய் செல்லவுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT