முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் வாபஸ்!

கட்சி நடவடிக்கையை தொடர்ந்து, வேட்புமனுவை திரும்பப் பெற்றார் செந்தில்முருகன்.

Updated On : 20 ஜனவரி, 2025 at 7:44 AM
செந்தில்முருகன்
பகிர்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் செந்தில்முருகன் திரும்பப் பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில் அதிமுக பிரமுகா் செந்தில்முருகன் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் உத்தரவை மீறி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததற்காக, கட்சியில் இருந்து செந்தில்முருகனை நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளான இன்று, செந்தில்முருகன் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

ஈரோடு அக்ரஹார வீதியை சோ்ந்த செந்தில்முருகன் ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி 2023 இடைத்தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை திரும்பப்பெற்ற செந்தில்முருகன் இடைத்தோ்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →