முகப்பு
தமிழ்நாடு

புளூடூத் ஹெட்செட்டை தேடியபோது மின்சார ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் தவறி விழுந்த புளூடூத் ஹெட்செட்டை தேடியபோது மின்சார ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2025 at 11:19 AM
ராஜகோபால் (19).
பகிர்:

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் தவறி விழுந்த புளூடூத் ஹெட்செட்டை தேடியபோது மின்சார ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், புதிய சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜகோபால் (19). இவர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு விடுதியில் தங்கி நந்தனம் கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து வந்தார்.

பகுதி நேர வேலையாக கேட்டரிங் வேலை கிடைக்கும் இடத்திற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கேட்டரிங் வேலைக்காக சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறினார்.

ரயில் வண்டி கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழையும் போது இவருடைய புளூடூத் இயர்பட்ஸ் தவறி கீழே விழுந்து விட்டது .

இதையடுத்து ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தில் இயர்பட்ஸை தேடிக் கொண்டிருந்தார்.

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மின்சார ரயில் மோதி படுகாயம் அடைந்தார்.

ரயில் நிலையத்தில் நின்ற சக பயணிகள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே மாணவர் ராஜகோபால் இறந்துவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →