ஆளுநர் ஆர்.என். ரவி X | TN Raj Bhavan
தமிழ்நாடு

ஆளுநர் தேநீர் விருந்து: அதிமுக, பாஜக தலைவர்கள் பங்கேற்பு!

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு நாள் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.

DIN

குடியரசு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு நாள் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.

விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு நாள் வாழ்த்து தெரிவித்தார்.

தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக அரசு புறக்கணித்தது. ஆளுநர் அளிக்கும் குடியரசு நாள் தேநீர் விருந்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்காவும், பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, நடிகர் சரத் குமார், தேமுதிக சார்பாக எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. தவெக-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், விருந்து நிகழ்ச்சியில் தவெகவினர் கலந்து கொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT